தனிநபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு தகவல்கள் பகிரப்படாது என்று வாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என அறிவித்துள்ளது.
மேலும், பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பயனாளர்கள் நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ தங்களால் முடியும் என தெரிவித்துள்ளது.
தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பின் புதிய விதிகளால் பலர் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிலுக்கு மாறிய நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…