குடும்ப அரசியல், ஊழல் போன்ற குற்றசாட்டுகளில் ஆளாகியுள்ளதால் அந்த அரசில் நாங்கள் இணைய மாட்டோம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் பேட்டி.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம்
இந்த நிலையில், இலங்கை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம் என தெரிவித்துள்ளார். இக்கட்சியானது இலங்கை நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை; மக்களின் விருப்பத்தை எதிரொலிக்கும் கட்சியாக நாங்கள் இருக்கிறோம். குடும்ப அரசியல், ஊழல் போன்ற லகுற்றசாட்டுகளில் ஆளாகியுள்ளதால் அந்த அரசில் நாங்கள் இணைய மாட்டோம் என்றும், திவாலாகும் நிலைக்கு நாட்டை அழைத்து சென்ற அரசில் ஒருபோதும் இணைய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…