#Breaking: விஜய்க்கு பிகில் படத்தில் ரூ.30 கோடி சம்பளம்.? வருமான வரித்துறை தகவல்.!

Default Image

நடிகர் விஜய் பிகில் படத்தில் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. விஜயின் பனையூர் வீட்டில் சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.

விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று விஜயின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீடுகளை தொடர்ந்து தற்போது பனையூர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோன்று பிகில் படம் தயாரித்த AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பிரபல சினிமா பைனான்ஸ் நிறுவுனர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட அவரது வீடுகள், அலுவலகங்களில் சோதனையிட்டு ரூ.65 கோடி வருமான வரித்துறை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்