#Breaking:உ.பி வன்முறை…நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..!
உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து,நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில், அம்மாநில துணை முதல்வர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில்,அவருக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் முயன்றனர். அப்போது, விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.இதற்கிடையில்,சம்பவம் நடந்த இடத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து,நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவரான ராஜீவ் சுக்லா கூறுகையில்:”நாளை, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் ஆர்பாட்டம் இருக்கும். இது நாடு தழுவிய இயக்கமாக மாறும். பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் உபி முதல்வரை நான் கோருகிறேன்”,என்று கூறியுள்ளார்.
Tomorrow, there will be gherao of DM’s office in every district across the country. It will become a countrywide movement. I demand the PM & UP CM take strict action against those responsible: Congress leader Rajiv Shukla in Delhi pic.twitter.com/UuqBWOHfBk
— ANI (@ANI) October 4, 2021