தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்து வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது. அதாவது, ஏராளமான ரஷ்ய படையினர் வெள்ளை நிற பேராசூட்டுகள் மூலம், உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு மக்கள் படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதையில் பொதுமக்கள் தஞ்சமைடைந்துள்ளனர். ரஷ்ய படையினர் உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில்,லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.இந்நிலையில்,தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்து வருவதாக ரஷ்ய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…