#BREAKING : உக்ரைன் விவகாரம் – சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!

உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி படையெடுப்பு நடத்திய ரஷ்ய படைகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு,உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில்,கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில் , உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி, உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சர்வதேச நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள மாட்டோம் என ஏற்கனவே ரஷ்யா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.