#BREAKING : இன்னும் 12 மணி நேரம் தான் இருக்கு..! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மருக்கு செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
அசானி புயல்
இந்தப் புயலுக்கு ‘அசானி’ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மருக்கு செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிகோபாா் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மர் நோக்கி செல்லும். எனவே. அந்தமான் மத்திய கிழக்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த புயலால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.