#BREAKING: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான்கள்.!
கடைசியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குளும் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பினர்.
ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளனர் என்று அங்கு வசிக்கு மக்கள் சர்வதேச ஊடகமான AFP-யில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து, அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
தலிபான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கி வருகின்றனர். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கந்தஹார், ஜலாலாபாத், மசார் இ ஷெரீப், குந்துஸ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள், தற்போது தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்தனர்.
ஏற்கனவே, தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் நெருங்கி இருந்த நிலையில், தற்போது தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தனர். காபூல் நகருக்கு அருகே இருக்கும் ஜலாலாபாத்தை அரசுப்படையினரின் எந்தவித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய நிலையில், கடைசியாக தலைநகர் காபூலையும் தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் என கூறப்படுகிறது.