#BREAKING: அடுத்தடுத்து பரபரப்பு.. மேயர் வீட்டில் தீ வைப்பு.. ஆளும்கட்சி எம்பி ஒருவர் உயிரிழப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி ஒருவர் உயிரிழப்பு என தகவல்.

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. இலங்கை கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் நடந்த கலவரத்தில் எம்பி கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, இலங்கையில் மொரட்டுவை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அரசின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்துக்கு மாலிகாவத் பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக மக்கள் போரட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் வன்முறையும், கலவரமும் பெரிதாக அரங்கேறி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

34 minutes ago
குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

1 hour ago
என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

3 hours ago
கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago
சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

5 hours ago
காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

5 hours ago