#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!

Default Image

யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக.16 முதல் 22-ஆம் தேதி வரை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஹம்பன் தோட்டா துறைமுகத்துக்கு சீன உளவுக்கப்பல் 11-ஆம் தேதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன உளவுக்கப்பல் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும்,  யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala