#BREAKING : பிப்.8-ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் – சபாநாயகர் அப்பாவு
பிப்-8 ஆம் தேதி சிறப்பு சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்றும், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வண்ணம் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, பிப்-8 ஆம் தேதி சிறப்பு சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்றும், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வண்ணம் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், இக்கூட்டம் காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.