#Breaking:அதிர்ச்சி…பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் – மருத்துவமனை திடீர் அறிவிப்பு!
மும்பை:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்(ப்ரீச் கேண்டி மருத்துவமனை) ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால்,வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பு,திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Veteran singer Lata Mangeshkar’s health condition has deteriorated again, she is critical. She is on a ventilator. She is still in ICU and will remain under the observation of doctors: Dr Pratit Samdani, Breach Candy Hospital
(file photo) pic.twitter.com/U7nfRk0WnM
— ANI (@ANI) February 5, 2022