#BREAKING: தொடர் தாக்குதல் – உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை!
உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது.
ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. உக்ரைன் நாட்டின் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது. தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வான்வெளி தாக்குதல் நடைபெற்று வருவதால் இந்தியர்களை அழைத்து வர உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் விமானம் டெல்லி திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம், போர் தொடங்கியதால் மீண்டும் திரும்பியது. ரஷ்யாவுடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து நாடு திரும்ப ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.