#BREAKING: சென்னையில் பரபரப்பு.! ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதும் விமான நிலைய பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகாசா விமானத்தையும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.