#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.

உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புடின் கூறியுள்ளார். அங்கு வாழும் அனைத்து உயிர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

அதாவது, தாயகம் திரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும். ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

52 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

2 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago