#Breaking: மே 31 வரை திரைத்துறை பணிகள் நிறுத்தம் – ஆர்.கே செல்வமணி
மே 31 வரை திரைத்துறை பணிகள் நிறுத்தப்படுகிறது என்று பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்துள்ளார்.
மேலும், சென்ற வாரம் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து, கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என கூறியுள்ளார். நடிகர் அஜித் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.