#BREAKING: படையை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு!

Default Image

ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார்.

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட அதிரடியாக ஆணையிட்டுள்ளார்.

ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார் அளித்துள்ளார். ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சை தொடங்க விடாமல் உக்ரனை மேற்கு நாடுகள் தடுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உக்ரைனில் போர் ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், 2 மில்லியன் இராணுவ இருப்புக்களை திரட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார். விடுவிக்கப்பட்ட நிலங்களில் உள்ள மக்களைப் பாதுகாக்க ரஷ்யா அவசர முடிவை எடுக்க வேண்டிய கடமை இருப்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்று புதின் கூறினார்.

மேலும், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ரஷ்யாவின் பகுதிகளாக மாற விரும்புகிறதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்