உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பெயர், ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், எஸ் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா.
இதனியையே, ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…