#BREAKING: மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா! – அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அதிபர் புடின் பெருமிதம்.
உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் தலைநகரான கீவ் உள்ளிட்ட பகுதியில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதிகளை நோக்கி முன்னேறியிருந்தன. அந்த நிலையில் தான் மரியுபோல் நகர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்நகரில் உள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கிய ரஷ்ய ராணுவம், உக்ரைன் வீரர்களை சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன்பின் அந்நகரை கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு புடின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025