#Breaking:அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்;இதை விட 10 மடங்கு பாதிப்பு – உக்ரைன் தகவல்!
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா,தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.எனினும்,கார்கிவ் நகரை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார் .
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Ukraine Foreign Affairs Minister Dmytro Kuleba says, “Russian army is firing from all sides upon Zaporizhzhia NPP, the largest nuclear power plant in Europe. Fire has already broken out. If it blows up, it will be 10 times larger than Chernobyl!” pic.twitter.com/e2eC0vkqQj
— ANI (@ANI) March 4, 2022