#BREAKING: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைத்தது ரஷ்யா! – அதிபர் அறிவிப்பு
உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு.
உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதற்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.
கடந்த 23-ம் தேதி தொடங்கிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜபோர்ஜியா பிராந்தியத்தில் 93% பேர், கெர்சன் பிராந்தியத்தில் 87% பேர், லுஹான்ஸ்க்கில் 99% பேர், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் 98% பேர் ரஷ்யாவுடன் இணைவதற்கு பொது வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.