#Breaking: கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிப்பு.! வருமான வரித்துறை தகவல்.!
பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான துறை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சொந்தமான அசல் ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டின் மறைவிடத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி ஆவணங்கள் வருமான வரித்துறை பறிமுதல் செய்தனர். மேலும் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. சோதனைக்குள்ளான விநியோகஸ்தர் கட்டுமான தொழிலதிபரும் ஆவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு சம்பளம் அளிக்கப்பட்ட ரசீதுகள் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் நடிகர் விஜய் அசையா சொத்துக்களில் செய்த முதலீடு குறித்து சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை எந்தவொரு ஆவணங்களும் மற்றும் பணமும் பறிமுதல் செய்தாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.