#Breaking : கோவை கல்லூரியில் ராக்கிங் – 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

case file

கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு அந்த மாணவர் தங்கி இருந்த விடுதியில்  உள்ள 3,4 ஆம் ஆண்டு  மாணவர்கள் அந்த மாணவரின்  அறைக்கு சென்று மது குடிப்பதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், மாணவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி, மொட்டை அடித்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். அதனை வீடியோ எடுத்து வைத்து, மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த மாணவர் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவனின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 மாணவர்களை கைது செய்தனர். இந்த மாணவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராக்கிங் செயலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. மேலும் தலைமறைவான மாணவரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்