ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தற்போது பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து, புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…