#BREAKING: இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்க ஒப்புதல்?

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட உள்ள பிரதமரின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் என தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதம் காலமாக மக்கள் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்கவும், இலங்கையில் புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோட்டபய ராஜபக்ச முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இலங்கையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய புதிய அரசை அமைக்க, அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசில் தற்போதைய பிரதமர் மகிந்தா ராஜபக்ச இருக்கமாட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட உள்ள அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அரசை அமைப்பது தொடர்பாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே விரைவில் அழைப்பு விடுப்பர் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோட்டபய ராஜபக்ச இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.