#BREAKING: இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர்!
இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாக்களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார்.
இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்குமாறு திபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து கட்சிகளின் சார்பில் அமைச்சக பதவியை ஏற்று நெருக்கடியை தீர்க்க முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சிகள் அடங்கிய காபந்து அரசை அமைக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இலங்கை அமைச்சரவையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் அனைவரும் அளித்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தனர். இலங்கையில் கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களோடு அதிபர் கோட்டாபய ராஜபக்சவை, பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், அனைவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.