#BREAKING: ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 130 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழப்பு என தகவல்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 130 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்ததில் பலர் பலியாகியுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
KABUL, Afghanistan (AP) — Afghanistan’s state-run news agency is reporting that at least 155 people have been killed in an earthquake in the country’s eastern Paktika province.https://t.co/Ikevh7XVqT
— Munir Ahmed (@munirahmedap) June 22, 2022