#BREAKING: அரசியல் குழப்பம் – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு.
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கு முன்பு துணை சபாநாயகர் ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். இதனிடையே, 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் அரசுக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதனால் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் எஸ்எல்பிபி கட்சிக்கு 105 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலையில், ஆளும் அரசு உள்ளது. இதனைத்தொடர்ந்து, இலங்கையில் புதிதாக பதவியேற்ற 24 மணி நேரத்திலேயே நிதியமைச்சர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார் அலி சப்ரி. இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.