#BREAKING: காவல்துறை அலுவலகம் ரஷ்யா தாக்குதல்..!

கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது 6 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பபடவில்லை.
இந்நிலையில், கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு. 112 பேர் காயமடைந்தனர் என உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாதுகாப்புத்துறை , உளவுத்துறை கட்டடங்கள் அருகே உள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலம் தீப்பற்றி எரிகிறது. உக்ரைனுடன் 2-கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள போதிலும் தாக்குதலை ரஷ்யா தொடர்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025