#BREAKING: நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் – சபாநாயகர்

Default Image

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை.

இலங்கையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

இதனிடையே அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று நடந்த வன்முறையில் 30க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு காவல்துறை தலைவர், ராணுவ தளபதிக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட தவறியது குறித்து வரும் 12-ஆம் தேதி விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்