#BREAKING : தனிமைப்படுத்திக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் .!

கொரோனா பாதித்த நபரை சந்தித்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 9,565 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 201-ஐ எட்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார்.
இந்த, ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்பு காரணமாக பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எத்தி கடந்த 15-ம் தேதி ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு ஃபைசல்க்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையெடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பரிசோதனை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா பாதித்த நபரை சந்தித்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025