இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தனித்தனியே இணையத்தில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு எரிபொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சமயத்தில், இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…