இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கலாவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான தீர்மானமும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…