#BREAKING: மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Default Image

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியது.

மருத்துவதற்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக (மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கண்டுபிடிப்பு) ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட்  நோபலின் விருப்பத்தின்படி, முந்தைய ஆண்டில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியுளது.

நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. இன்று ஸ்வீடனை சேர்ந்தவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இயற்பியல், புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட உள்ளது. மேலும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்.10ம் தேதியும் அறிவிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்