#Breaking:அடுத்த டார்கெட் கோகோ கோலா – எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில்,இறுதியாக ட்விட்டரில் 100 சதவீத பங்குகளை சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார்.
இந்நிலையில்,கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் கூறியதாது:”அடுத்து நான் கோகைனை மீண்டும் உள்ளே வைப்பதற்காக கோகோ கோலாவை வாங்குகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,”சுதந்திரமான பேச்சு” என்பதன் மூலம், நான் சட்டத்திற்குப் பொருந்துவதைக் குறிக்கிறேன்.எனினும்,நான் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தணிக்கைக்கு எதிரானவன்.மக்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்க விரும்பினால்,அதற்கான சட்டங்களை இயற்றுமாறு அரசிடம் கேட்பார்கள்.எனவே,சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.
அதே சமயம்,பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க ட்விட்டர் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும்.ஆனால்,ட்விட்டர் அவ்வாறு இருந்தால் தீவிர வலதுசாரிகளோ,இடது சாரிகளோ கோபம்தான் அடைவார்கள்.
இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் டிஎம்களில் சிக்னல் போன்ற என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்கும்,எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022