#BREAKING: அடுத்த அதிர்ச்சி..ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்!
ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் ஏமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று வடகொரியா சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகளை வீசியதாக தென்கொரியா கூறியிருந்தது. ஒருபுறம் தொடர்ந்து 4-ஆவது நாளாக உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மற்றொரு நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறியுள்ளது என்பது அச்சுறுத்தலை உண்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த 48 மணி நேரத்தில் உக்ரேனில் மட்டும் அல்ல சீரியா, ஏமன், சோமாலியா என உலகின் பல பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Breaking: #Saudi & #UAE fighter jets are bombing Sana’a international airport. #Yemen. pic.twitter.com/PHdCwD7kv0
— Ali Hassan (@AliHass90119156) February 27, 2022