Breaking news: இலங்கையில் 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு !102 பேர் பலி
இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை பல தேவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 102பேர் மேல் உயிர் இழந்தனர்.மேலும் 280க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் மற்றும் 2 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.