BREAKING NEWS:அரசுப்பள்ளிகளின் தேர்ச்சியிலும் விருதுநகர் மாவட்டம் 94.26 சதவிகிதத்துடன் முதலிடம்!
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது . மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 91.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 1% குறைவு என்றும் தெரிவித்தார்.
மேலும் ப்ளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை-1,907
விருதுநகர் – 97% (முதலிடம்)
ஈரோடு- 96.3 (இரண்டாமிடம்)
திருப்பூர்-96.1% (மூன்றாமிடம்)
அரசுப்பள்ளிகளின் தேர்ச்சியிலும் விருதுநகர் மாவட்டம் 94.26 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:
இயற்பியல்- 96.4%
வேதியியல்- 95.0%
கணிதம்- 96.1%
உயிரியியல்- 96.34
விலங்கியல்- 91.9%
தாவரவியல்- 93.9%
வணிகவியல்- 90.30%
கணக்குபதிவியல்- 91%
கணினி அறிவியல்- 96.1%
+2 தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்க்கலாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.