#BREAKING: நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரஷ்யா எச்சரிக்கை

Default Image

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு அறிவிப்பிற்கு ரஷ்யா கடும் கண்டனம்.

உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, இன்று தாக்குதலை குறைத்துள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்ற மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உக்ரைன் தலைநகர் கிவ்-ல் மீண்டும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது, வான்வெளி தாக்குதலுக்கான எச்சரிக்கை என தகவல் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிகளிலுள்ள கல்லூரிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஒருபக்கம் பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் மூன்றாம் உலகப்போரின் உச்சம் என எச்சரிக்கை விடுத்தது வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து போராட அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள், போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அந்தவகையில், உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்க முன் வந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஐந்தாவது நாளாக போர் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய தயார் என்றும் ஆனால் விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைன் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, போருக்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், போரில் சண்டையிட உக்ரைன் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்