#Breaking:பாக்.MQM கட்சி திடீர் அறிவிப்பு – கவிழப் போகும் இம்ரான்கான் அரசு!
பாகிஸ்தான்:MQM கட்சி ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.இதனையடுத்து,இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
MQM கட்சி திடீர் அறிவிப்பு:
இந்நிலையில்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக் கொண்ட நிலையில்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. இதன்காரணமாக இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பெரும்பான்மையை இழந்த அரசு:
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே இம்ரான்கான் அரசு பின்னடைவை சந்தித்துள்ளது.மொத்தம் உள்ள 342 இடங்களில் 172 இடங்களுக்கு ஆதரவு தேவைப்படும் நிலையில்,இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக் கொண்டதால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பதவி விலகல்:
MQM கட்சி அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்து இம்ரான்கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது.இதனால்,உடனே பதவியை விட்டு இம்ரான்கான் விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.அல்லது நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு பதவி விலக உள்ளார் எனக் கூறப்படுகிறது.
Imran Khan loses majority as MQM strikes deal with opposition
Read @ANI Story | https://t.co/tkgLPMp3n5#ImranKhan #NoConfidenceMotion pic.twitter.com/Bh48oDzqS8
— ANI Digital (@ani_digital) March 30, 2022