நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். அதன்படி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 850 திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தற்போது, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக 400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லிலித் குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…