இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதாக தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டிருந்தார். எனினும், ராஜபக்சே ராஜினாமா செய்யமாட்டார் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
மேலும், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அமைச்சர்களும் ராஜினாமா செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடும் பொருளாதார நெருக்கடியால், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்தா ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியாக தகவல் வெளியாகியிருந்தது. மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களின் வன்முறை காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…