#Breaking:பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்சே!

Published by
Edison

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த சூழலில்,இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், இலங்கை கொழும்புவில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் திடுக்கிடும் தகவலை நேற்று தெரிவித்தது. மேலும்,இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்து உள்ளதாகவும்,இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இவ்வாறு,இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக மக்கள் போரட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,மறுபக்கம் வன்முறையும், கலவரமும் பெரிதாக அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்த சில மணி நேரங்களிலேயே இலங்கையின் குருநாகலில் உள்ள அவரது இல்லம், தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கொழும்புவில் உள்ள பிரதமருக்கான சொகுசு மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்சே வெளியேறியுள்ளார்.இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து வரும் நிலையில் பிரதமர் மாளிகையில் இருந்து கடும் பாதுகாப்பாக வெளியேறி அதன்பின்னர் மஹிந்த ராஜபக்சே வேறு வீட்டில் குடியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Recent Posts

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

9 minutes ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

20 minutes ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

1 hour ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

2 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

2 hours ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

2 hours ago