#BREAKING: இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு!
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது வழக்கம். கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிட்டார்.
ரிஷி சுனக்கை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரும், வெளியுறவு செயலாளராக உள்ள லிஸ் ட்ரஸ் போட்டியிட்டார். தேர்தலையொட்டி நடந்த கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் ட்ரஸ்-க்கு அதிக வெற்றி வாய்ப்பு என தகவல் வெளியானது. இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்ற நிலையில், லிஸ் ட்ரஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.