#BREAKING: லேண்டர் மாட்யூல் பேலோடுகள் இயக்கம் தொடக்கம்..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல்.!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.
லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த லேண்டரில் ஆனது 4 பகுதிகள் உள்ளன. 26 கிலோ எடை கொண்ட ரோவரில் 2 பகுதிகள் உள்ளன.
இந்த நிலையில், சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல் பேலோடுகளான இல்சா (ILSA), ரம்பா (RAMBHA) மற்றும் சேஸ்ட் (ChaSTE) ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்ட ட்வீட்டில், “அனைத்து நடவடிக்கைகளும் அட்டவணையில் உள்ளன. அனைத்து அமைப்புகளும் இயல்பானவை. லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன.” என்று பதிவிட்டுள்ளது.
மேலும், “ரோவர் மொபைலிட்டி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ப்ராபல்ஷன் மாட்யூலில் SHAPE பேலோட் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
All activities are on schedule.
All systems are normal.????Lander Module payloads ILSA, RAMBHA and ChaSTE are turned ON today.
????Rover mobility operations have commenced.
????SHAPE payload on the Propulsion Module was turned ON on Sunday.
— ISRO (@isro) August 24, 2023