#Breaking: படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கமல், ஷங்கருக்கு சம்மன்.!
- இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு நசரத்பேட்டை போலீசார் சம்மன் முடிவு செய்துள்ளனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா, தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு. மேலும் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது என்று நசரத்பேட்டை போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் நடைபெற்றது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமைடந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் நேற்று மருத்துவமனைக்கு நடிகர் கமல்ஹாசன் வந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்குவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.