#Breaking: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1,00,00,000 கோடி- கமல்ஹாசன் அறிவிப்பு.!
- இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்குவதாக கமலஹாசன் தெரிவித்தார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து படப்பிடிப்பி தளத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடையே பேசி அவர், விபத்தில் உயிரிழந்த ஸ்ரீ கிருஷ்ணா, மது, சந்திரன் என்ற 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்தார். பின்னர் சற்று நூலிழையில் நான் உயிர் தப்பிவிட்டேன் என கூறினார். மேலும் சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டார். இதுபோன்று மீண்டும் ஏற்பட கூடாது என வருத்தத்துடன் தெரிவித்தார்.