வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டி வந்தார். நேற்று வாசிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் அதிகாரம் மாற்றம் நடைபெற்றது. அப்போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றிகையிட்டு கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் தடுப்புகளை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிபர் ட்ரம்ப் வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக ட்விட்டரில் வீடியோ பதிவை பகிர்ந்தார். உடனடியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அந்த வீடியோ பதிவை நீக்கியது. மேலும் ட்ரம்பின் கணக்குகளும் முடக்கப்பட்டது.
இந்த வன்முறைக்கு உலக தலைவர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்றது. கடமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தும் வழிவகுக்கிறது என கூறப்பட்டது.
இதனைதொடந்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார் ஜோ பைடன். சில மாநிலங்களில் பெற்ற வெற்றிக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…