#Breaking:’மிஸ் யுனிவர்ஸ் பட்டம்’ வென்ற இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து!
பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற 70-வது மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில்,பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் வென்றுள்ளார்.சுமார் 80 பேர் பங்கேற்ற இப்போட்டியில்,மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து தட்டிச் சென்றுள்ளார்.
இவர் ‘மிஸ் சண்டிகராக’ கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,பல பட்டங்களையும் இந்தியாவில் இவர் வென்றுள்ளார். ஏற்கனவே,இந்தியாவின் லாரா தத்தா என்பவர் கடந்த 2000-த்தில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில்,தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்தியப் பெண்ணான ஹர்னாஸ் இப்பட்டத்தை வென்றுள்ளார்.
கடந்த முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சியாவிடமிருந்து இப்பட்டத்தை ஹர்னாஸ் தட்டிச் சென்றுள்ளார்.