#Breaking : ஓ.என்.வி விருதை திரும்ப தருகிறேன்…! கவிஞர் வைரமுத்து அறிவிப்பு…!

Default Image

கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது.

பிரபல நடிகை பார்வதி, பாடகி சின்மயி, இயக்குனர் அஞ்சலி மேனன், நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ், நடிகை ரிமா ஆகியோர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இலக்கியத்தில் சிறந்த ஓ.என்.வி விருதை வழங்குவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து,  கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருதை மறுபரிசீலனை செய்வதாக ஓ.என்.வி கலாச்சார அகாடமி தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘

அனைவரையும் வணங்குகிறேன்.

கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த ருது. மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் விரு பட்டிருப்பதாய் அறிகிறேன்.

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி. குரூப்பையும் சிறுமைப்

படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்,

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன் நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன் எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும்

அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய்

2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட

முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும். ஊடக உறவுகளுக்கும் என் நன்றி.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்